ஆசிரியர் சமூகம் சிந்திக்க.....!!


நீங்களும் அரசு ஊழியர்கள்தான்.  ஆனால் மற்ற எந்த துறையையும் விட அதிகம் பொதுமக்கள் அதிருப்தியையும்
அரசின் பாரபட்சத்தன்மையும் உங்களின் மீதே இருக்கிறது...
ஏன்....?


அரசின் துறைகளின் நோயாளிகள் வரவில்லை என்று எந்த மருத்துவரையும் பணியிட மாறுதல் செய்யவில்லை,

பயனாளிகள் வரவில்லை என்று வேறு எந்த துறை
ஊழியர்களையும் உபரி என்று
பணி நிரவல் செய்யவில்லை.


  ஆனால்
அடிப்படை கல்வி அறிவை கொடுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் வரவில்லை என்று காரணம் கூறி பணி நிரவல் பணி.. இடமாறுதல்
என்று பந்தாடப்படுகிறார்கள்.


மற்ற
ஊழியர்களின் பணிகளை விட ஆசிரியர்களின் பணி என்பது
சற்று சிரமமானதுதான்.

  எல்லாரையும் போல கற்பித்தல் நாட்கள் 220
மற்ற பணிகள் 100  நாட்கள்
(அலுவலக பணி,  தேர்தல் பணி, பேப்பர் திருத்துதல் .....) என ஏறக்குறைய 320  நாட்கள் வேலை செயகிறீர்கள்.

இருந்தாலும் அரசும் பொதுமக்களும் உங்களை மீண்டும் மீண்டும் ஏன்... சீண்டுகிறார்கள்.


இப்போது என்ன நடக்கிறது
உபரி என்று பல ஆயிரம் பேரை
பணி நிரவல் என்று
 பல்வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செயகிறார்கள்.

அரசின் புள்ளி விவரப்படி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில்

அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை கூடுதலாக உள்ளதாக தெரிகிறது.
இப்படி இருக்கையில் நீங்கள் ஏன் பந்தாடப்படுகிறீர்கள்.....


* மாணவனை கண்டிக்கக்கூடாது.


* அவனுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இருக்கக்கூடாது.


* எப்படி கேடு கேட்ட செயலை செய்திருந்தாலும் அவன் மீது எந்தவிதமான கண்டிப்பும் காட்டக்கூடாது.


*  ஆனால் அவன் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும்


* தேர்ச்சி விகிதம் சிறப்பாக இருக்க வேண்டும்


* கற்பித்தலுக்கு எந்த இடையூறு செய்தாலும் அதை யாரிடமும் கூறக்கூடாது.


* மாணவர் சேர்க்கை விகிதம் முன்னேற்றம் காண வேண்டும்


* பள்ளி செல்ல குழந்தைகளை கணக்கெடுக்க வேண்டும்.


இப்படி சவாலான பணிகள்
பல இருந்தாலும்
உங்களின்  பணி மெச்சப்படுவதில்லை.....
என்ன காரணம் என்று...
என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா...?


உண்மை என்ன தெரியுமா...?

  உங்களுக்கு ஆயிரம் சங்கங்கள்.... அதற்கு கட்சி சாயங்கள்...

ஆளும் கட்சி சார்பு சங்கம்

  ஆசிரியர்களின் எந்த பாதிப்புகளுக்கும் போராடாது..

மற்ற சங்கங்கள் பிரிந்து நின்று அவர்களுக்குள்ளாகவே பதவிகளுக்கு அடித்துக்கொள்வது...

 இப்படி இருந்தால்...
எப்படி நீங்கள்
உங்கள் உரிமைகளை மீட்டெடுப்பீர்கள்.

முதலில் அனைத்து ஆசிரியர்களும் ஒரு குடையின் கீழ் இணையுங்கள்.


ஆசிரியர்கள் என்பவர்கள்
மற்ற அரசு துறை ஊழியர்களை போலவே நீங்களும்
ஒரு அரசு ஊழியர்தான் என்ற நிலை வரும் வரை ஒன்றாகவே இணைந்திருங்கள்
உங்களுக்குள் இருக்கும்
பல நூறு சங்கங்களை கலைத்துவிட்டு...

ஒரு குடையின் கீழ் இணைந்து செயல்படுங்கள்......


--------இதை எழுதிய
நான் ஆசிரியர் அல்ல
ஒரு வழக்கறிஞர்------

என் ஆசிரியர்கள் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பு உண்டு
அதனாலேயே இதை நான் எழுதுகிறேன்.....


நன்றி ஒன்று படுங்கள்.... வெற்றிபெறுங்கள் .