இரவில் ஆய்வு செய்வும் முதன்மை கல்வி அதிகாரி மீது ஆசிரியர்கள் அதிருப்தி...!!


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி யில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ( CEO ) இரவிலும்  ஆய்வுக்கூட்டம் நடத்தியதால், ஆசிரியர் ஆசிரியைகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பள்ளி நேரமான மாலை 4.30 க்கு மேல் தொடங்கி இரவு 8 மணிவரை ஆய்வு என்ற பெயரில் சி இ ஓ தங்களை
அலைக்கழிப்பதாக பெண் ஆசிரியைகள் குற்றஞ்சாட்டுகின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் டீச்சர்ஸ் பேருந்தை தவறவிட்டு விட்டு உரிய நேரத்திற்கு வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக வேதனைப்பட்டனர்.இது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகனுக்கே வெளிச்சம்.