கசடறக் கற்க கற்பிக்க "தமிழ் வாசிக்க எழுத நாற்பத்தைந்து நாட்கள் " புத்தகம்
 திருமதி கனகலட்சுமி அம்மையாரின் திருத்தியமைக்கப்பட்ட புதிய வடிவிலான கசடறக் கற்க கற்பிக்க புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கிறது !!
45 நாட்களில் தமிழ் மொழியை நன்றாக பிழையின்றி வாசிக்க முடியும் , அழகான கையெழுத்துப் பயிற்சியும் கிடைக்கும் , இந்த ஆய்வை பல பள்ளிகளில் பல ஆசிரியர்கள் செயல்படுத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் , திருவண்ணாமலை மாவட்ட CEO திரு ஜெயக்குமார் அவர்களும் இந்த ஆய்வை அறிந்து  அம்மையார் அவர்களை  நேரிடையாக அழைத்து மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் பயிற்சி கொடுத்து,  இன்று திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள்  தமிழை பிழையின்றி நன்றாக வாசித்தும்  சாதனை புரிந்துள்ளார்கள் , அந்தளவுக்கு நல்ல தரமான கற்பித்தல் முறை,  விரைவில் தமிழகம் முழுவதும் இந்த கற்பித்தல் முறையை கொண்டு செல்ல அரசு முன்வர வேண்டும் என்பதே என் போன்ற ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு !!

குறிப்பு : திருவண்ணாமலை மாவட்டத்தில் சில அங்கன் வாடி குழந்தைகளுக்கும் பயிற்சியளித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது வியப்பின் உச்சம் !