முற்றிலும் மாற்றப்படுகிறது.. அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்..!!


தமிழக அரசு பள்ளிகளில் அடிக்கடி மாற்றங்கள் வருவது வழக்கமாகியுள்ளது. முன்னதாக, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு சீருடை மாற்றப்பட்டது.மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 1.69 கோடி மதிப்பிலான கலையரங்கு மற்றும் புதிய வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் கே.பழனிசாமி அதனை உறுதி செய்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, ''தமிழக அரசு பள்ளிகளின் பாட திட்டத்தை மாற்றி, கல்வி வல்லுநர்களைக் கொண்டு புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்த கல்வியாண்டில், கல்வித் துறைக்கு ரூ.27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அதிக பட்ச தொகையாகும்.
மேலும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் நவீன கணினி ஆய்வகங்கள் 438 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படும்'' எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.