Title of the document


💎பி.ஆர்க்., என்ற கட்டடவியல் படிப்புக்கு, இன்று முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.



 *💎தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அண்ணா பல்கலை வழியாக நடத்தப்படுகிறது.



*💎அதேபோல், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, பி.ஆர்க்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கும், அண்ணா பல்கலையால் தனியாக நடத்தப்படுகிறது*


*💎இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்குக்கு, இன்று முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கும் என, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலை அமைத்துள்ள, உதவி மையங்களுக்கு, மாணவர்கள் நேரில் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்*


*💎வீட்டில் இருந்தபடியே கணினி வழியாக, tnea.ac.in/barch 2018 அல்லது, www.annauniv.edu/barch2018 என்ற இணையதள இணைப்பிலும் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள், ஜூலை, 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்*


*💎விண்ணப்ப கட்டணத்தை, 'ஆன்லைன்' வங்கி பண பரிவர்த்தனையாகவும், வரைவோலையாகவும் செலுத்தலாம். பதிவின் போதே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, எந்த உதவி மையத்திற்கு வர விருப்பம் உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்*


*💎அதன்பின், அண்ணா பல்கலை அறிவிக்கும் தேதியில், அந்த உதவி மையத்துக்கு, அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் செல்ல வேண்டும். விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு கோரும் மாணவர்கள், சென்னையில், அண்ணா பல்கலைக்கு மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர முடியும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post