3 மாதம் ரேஷன் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து!


 3 மாதம் ரேஷன் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து!
தொடர்ந்து மூன்று மாதங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் இருந்தால், குடும்ப அட்டை ரத்து செய்யப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் மாநில உணவுத் துறை அமைச்சர்கள் மாநாடு, டெல்லியில் நேற்று (ஜூன் 29) நடைபெற்றது.

மாநாட்டிற்கு பிறகு பேசிய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், “பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதிபடுத்த வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் உரியவர்களுக்குதான் செல்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்காமல் இருக்கும் பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், ரேஷன் பொருட்கள் தேவைப்படாத மக்களை கண்டறிந்து, அந்த பொருட்களை மற்றவர்களுக்கு வழங்க முடியும். இதனால் பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்” என்றார்.

அதேசமயம், ரேஷன் கடைக்கு வர முடியாதவர்களுக்கு வீடு தேடி சென்று பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.