1,6,9,11 வகுப்பு பாடப்புத்தகங்கள் எளிமையா உள்ளனவா? என ஆய்வுக்கூட்டம்குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக பாடநூல் ஆய்வுக்கூட்டம் சனியன்று நடந்தது. இக்கூட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர். 1,6,9,11 ஆம் வகுப்புப் பாடநூல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டாலும் நேரம் போதாமை காரணமாக முதல் வகுப்பு நூல்களுக்கானவை மட்டும் முன் வைத்து பேசப்பட்டது. பிற நூல்களுக்கு மீண்டும் விரைவில் கூடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு பாடநூல்களில் உள்ள நிறை குறைகளை ஆசிரியர்கள் பட்டியலிட தொகுத்திருக்கிறோம். தொகுத்தவற்றை மீண்டும் சரிபார்த்து உறுதிப்படுத்தியபின் பரிந்துரைகளை விரைவில் பதிவிடுகிறோம். அரசுக்கும் அளிக்கிறோம். பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தது மட்டுமல்லாமல் வெகு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் பங்கேற்றது பெருமகிழ்வைத் தந்தது. பேராசிரியர்களின் ஆதரவு போற்றத்தக்கது.