Title of the document


ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தும் வகையில், அக்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி மானியம் வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுமார் 800 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சர்வதேச தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்நிலையில், ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

டெல்லி, மும்பையில் உள்ள ஐஐடி, பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி, மணிபால் அகடமி, ராஜஸ்தானில் உள்ள பிர்லா தொழில்நுட்ப அறிவியல் கழகம், உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு மானியமாக சுமார் ரூ.1000 கோடி வழங்குகிறது. வருகிற 5 ஆண்டுகளில் இந்த மானியத்தொகை வழங்கப்பட உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சர்வதேச தரம்மிக்க கல்வி நிறுவனங்களாக உயர்த்துவதற்காக இந்த நிதி வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post