ஆசிய கண்டமே திரும்பி பார்க்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்ஆசிய கண்டமே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 12ஆம் வகுப்பு முடித்தவுடனே வேலைவாய்ப்பு வழங்கவும், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள், க்யூ.ஆர். கோடுடன் கூடிய பாடபுத்தகங்கள், 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வைஃபை வசதி ஆகியவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றியமைக்கப்படும் எனவும்