பள்ளிக்கு வந்த முதல் வகுப்பு மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு

பள்ளிக்கு வந்த முதல் வகுப்பு மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டையில் எம்.கே.என் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நடப்பாண்டு 26 மாணவர்கள் புதிதாக முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.
பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து  மேள தாளத்துடன் வரவேற்றனர். இதனால் முதல் நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகள் மிக்க உற்சாகமடைந்தனர்.
பள்ளி சார்பில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு மிக தூண்டுதலாக இருப்பதாக குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அங்கிருந்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
இதில் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் மிக உற்சாகமாவும், குதூகலத்துடனும் காணப்பட்டர்.
இது போன்ற நிகழ்வுகள் வரவேற்கப்பட வேண்டியதே என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பள்ளியின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும், அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்ட இது மாதிரியான நிகழ்வுகள் நடத்தப்படுவதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் சிவகுருநாதன் கூறினார். இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அரசு பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க முடியும் என்றார்.