Title of the document

 

தெரியாத நபர்களுடன் சாட் செய்யாதீர்கள்' - மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்.சி.இ.ஆர்.டி!
www.kalvinews.com
அறிமுகம் இல்லாத நபர்களுடன் சாட் செய்ய வேண்டாம் என மாணவர்களுக்கு என்.சி.இ.ஆர்.டி அறிவுரை வழங்கியுள்ளது.

வளந்துவரும் இணையதள உலகில் சைபர் பாதுகாப்பு மற்றும் இணையதள பயன்பாடு குறித்து மாணவர்கள் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்குத் தேசிய கல்வி மற்றும் பயிற்சி கழகம் (என்.சி.இ.ஆர்.டி) அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து என்.சி.இ.ஆர்.டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,  ''மாணவர்கள் தேவையில்லாத அல்லது அறிமுகம் இல்லாத நபர்களுடன் சாட் செய்வதோ, இ-மெயில் மூலம் விவாதிக்கவோ வேண்டாம். அவ்வாறு விவாதிக்க வேண்டுமானால் உங்கள் பெயர் அல்லாமல் வேறு பெயர் மூலம் விவாதியுங்கள்.

மேலும் அடுத்தவர்கள் முன் ஆன்லைன் சாட் செய்யக்கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் மின்னஞ்சலில் உண்மை விவரங்களைப் பதிய வேண்டாம். மெயில் விவாதங்களை உடனடியாக தணிக்கைக்கு உட்படுத்திக் கண்காணிக்க வேண்டும். அடுத்தவர்களை தங்கள் பென் டிரைவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். கம்ப்யூட்டர் மானிட்டரில் தேவையில்லாத ஐகான்களை அகற்ற வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post