Click Below Image To Join WhatsApp Group
KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளிகளில் விரைவில் LKG-UKG வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் விரைவில் LKG-UKG வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்க, முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தில் எம்எல்ஏ செம்மலை தனியார் பள்ளிகள் மீது உள்ள மோகத்தை குறைக்கும் வகையில், ஆங்கில வழியிலான எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை அரசு பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்று கோரினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி தொடங்க முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில்  ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டமும், டாக்டர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் உறுதியளித்தார்

0 Comments:

Post a Comment