Title of the document

உத்தரப் பிரதேசத்தில் வீடுகளில் கழிப்பறை கட்டியதற்கு சான்றாக புகைப்படம் எடுத்து அனுப்பினால் மட்டுமே மே மாதத்திற்கான ஊதியம் தரப்படும் என ஆசிரியர்களுக்கு அம்மாநில கல்வித்துறை  அறிவுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிதாபூரில் உள்ள வீடுகளில் அரசு நிதி உதவி பெற்றுவிட்டு கழிப்பறை கட்டாமல் முறைகேடு செய்து பெற்ற நிதியை சொந்த செலவுகளுக்கு அந்த கிராமத்து மக்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து முறைகேடு செய்தவர்களை கண்டுபிடிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கல்வித்துறை அதிரடியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு நூதன முறையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் படி, கழிப்பறை கட்டுவதற்கான நிதியை பெற்றவர்கள்  கழிப்பறை கட்டியதற்கு சான்றாக செல்பி புகைப்படம் எடுத்து அனுப்பினால் மட்டுமே மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி சமையல்காரர்கள் உள்ளிட்டோர் வீட்டில் உள்ள கழிப்பறை முன்பு செல்பி எடுத்து அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். செல்பி தெளிவான வெளிச்சத்தில் எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post