தமிழக அரசில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க ஜூன் 29 கடைசி

தமிழ்நாடு நீதித்துறையில் துறையில் காலியாக உள்ள 16 மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்ப்பாளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முதுநிலை தமிழ், பி.எல். மூன்று அல்லது ஐந்தாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Translator (மொழிபெயர்ப்பாளர்)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700
தகுதி: தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம், சட்டத்துறையில் மூன்று அல்லது ஐந்தாண்டு பி.எல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில்  எழுத் பேச தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Translation Officer (மொழிபெயர்ப்பாளர் அதிகாரி)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: தமிழில் முதுகலை பட்டம், சட்டத்துறையில் மூன்று அல்லது ஐந்தாண்டு பி.எல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத் பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் வங்கி அட்டைகள் பயன்படுத்தி செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  “www.tnpsc.gov.in” என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.07.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  18.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_11_Translation_Officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

0 Comments:

Post a Comment