ஒரே வேலை
இரு வேறு ஊதியம்
வழங்கும் தமிழக அரசே
2009 க்குப் பின்
இடைநிலை ஆசிரியரின் பணியில்
என்ன இழிநிலை கண்டாய் அரசே
ஏன் கொண்டாய் பிழையை
எம் ஊதியத்தில்
எம் ஊதிய நிர்ணயம்
பிழையென்று
புரிந்த பின்பும்
உன் செங்கோலைத்
தூர எறிகிறாய்
எங்களை ஹார்மோன்களின்
ஆளுமையில்
எகிற வைக்கிறாய்
ஒரு நபர் குழுயென்கிறாய்
மூன்று நபர் குழுயென்கிறாய்
நம்பிச் சென்றால்
நன்றாய் நகர்த்துகிறாய்
குழுவின் ஆயுளை
பின் நீயே
அக்குழுவிற்காய் கூர் தீட்டுகிறாய்
ஒரு கொலை ஆயுதம்
எங்கள் நம்பிக்கையின்
மேல்
எத்தனை முறை தான்
அடுக்குவாய்
உன் ஏமாற்றுக்
கற்களை
எப்படிக் கலைவோம்
எதை நம்பி பிரிவோம்
இனி அரசாணையில்லாது
அரையடிக் கூட அகலோம்
என் ஊதியம்
அதில் ஏன் படுகிறது
உன் கை
ஏமாற்றும் வித்தைகளை
ஏதாவதொரு மூலையில் வை அரசே
உன் மூளையில்
இனியாவது
எங்களுக்கொரு நியாயம் செய்
இறுதி வரை இணைந்திருப்போம்
இரவென்றும் பகலென்றும்
பாரோம்
அரசாணை ஒன்றே
எங்கள் இலக்கு
அதுவே உனக்கெதிராய்
எங்கள் முழக்கம்
- மகேஷ் சிபி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment