​மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு திட்டம் விரைவில் அமல்..!!

மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில், மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு திட்டம் தொடங்கவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் MGR நுற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் புகைப்பட கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு ஸ்மாட் கார்டு வழங்கும் திட்டம் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

மாணவ மாணவியர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் 54 ஆயிரம் கேள்விகளுக்கான பதில்கள் வரைபடத்துடன் வழங்கப்படும் என்றும் மாணவர்கள் விபத்து காப்பீடு திட்டம் அறிவிக்கவுள்ளதாக கூறினார். வரும் திங்களன்று இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்டார்