மின்னணு பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் பொருட்டு கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இலவச இணைய வசதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு ட்ராய் வலியுறுத்தியுள்ளது.
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து மின்னணு பணபரிவர்த்தனைக்கு மாறுமாறு பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக பரிசுத் திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய், மின்னணு பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பிட்ட அளவு இணைய இணைப்பினை இலவசமாக வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இதற்காக மாதம் ஒன்றுக்கு 100 மெகாபைட்ஸ் (MB) என்ற அளவிலான இணைய வசதியை இலவசமாக அளிக்கலாம் என்று ட்ராயின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment