நேற்றைய அதி தீவிர வர்தாப் புயலில் கடும் பாதிப்புக்குள்ளான தொலைத் தொடர்பு சேவைப் பணிகள் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கின்றன. இதனால் சென்னையில் இருக்கும் தங்களது உறவினர்களின் பாதுகாப்பை அறிந்து கொள்ள முடியாமல்
தமிழகமெங்கும் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கவலை கொண்டுள்ளனர். சென்னையில் இருக்கும் மக்கள் பிற பகுதியினரைத் தொடர்பு கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தொலைத் தொடர்பு சேவை இணைப்புகள் நாளைக்குள் சீரமைக்கப் பட வேண்டும் என தமிழக அரசு சம்மந்தப் பட்ட தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
Post a Comment