அரசுபள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் காக்க சத்துணவு மற்றும் வாரத்திற்கு 5 நாட்கள் முட்டை வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..ஆனால்
அரசு பள்ளிகளில் சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக இருப்பின் சனிக்கிழமைகளில்
முட்டை வழங்கப்படுவதில்லை,,??
வாரநாட்களில் எதிர்பாராமல் ஒரு நாள் விடுமுறை அளித்தால் மட்டுமே அந்த நாளை ஈடுசெய்யவே சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது...அப்படி இருக்கையில் சனிக்கிழமை ஏன் முட்டை வழங்கப்படுவதில்லை.,,.எத்தனை சனிக்கிழமை பள்ளி செயல்பட்டாலும் ஓர் ஆண்டில் மொத்த வேலைநாட்கள் 220 நாட்கள் மட்டுமே..!!! எனவே
இதில் தவறு எங்கு நடக்கிறது என்பதை ஆராய்ந்து சனிக்கிழமைகளில் முட்டை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- k. வெங்கடேசன்.,இ.ஆ
ஊ.ஒ.தொ.பள்ளி
கெரகோடஅள்ளி
மொரப்பூர் ஒன்றியம்
தருமபுரி
Post a Comment