Title of the document


தமிழகம் முழுவதும் இ சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் விண்ணப்பதாரரின் பெயர், மாவட்டம், தாலுகா, கிராமம், எந்த வகுப்பை சேர்ந்தவர், தந்தை பெயர் மற்றும் முகவரியுடன் அரசின் முத்திரை பதித்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்களில் போலியான சான்றிதழ்களும் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக சான்றிதழ் அவசரத்துக்காக தாலுகா அலுவலகங்களில் நடமாடும் இடைத்தரகர்கள் கையில் பணத்தை கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். இடைத்தரகர்கள் தாங்கள் போலியாக தயாரித்து வைத்துள்ள அரசின் முத்திரையுடன், வருவாய்த்துறை அதிகாரிகளின் கையெழுத்தையும் தாங்களே போட்டு சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனி, ரகசிய பார்கோடு எண்ணுடன் சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்கள் இ சேவை மையங்களில் வழங்கப்படும்.

தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை அடுத்த வாரம் அல்லது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான சுற்றறிக்கை தமிழகத்தில் எல்லா இ சேவை மையங்களுக்கும் நேற்று வந்துள்ளது. அதில், ‘சாதி சான்றிதழ்களை வழங்குவதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருபவர்களிடம் ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், மாணவர்களாக இருந்தால் பள்ளியின் மாற்றுச்சான்றிதழ் நகல்களுடன் கட்டாயமாக உரியவர்களின் புகைப்படம் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post