சந்திரன், செவ்வாய் கிரகங்களை தொடர்ந்து, சூரியனை ஆய்வு
செய்யும் ஆதித்யா செயற்கைகோள் சில மாதங்களில் விண்ணில் செலுத்துவதற்கான
பணிகள் தீவிரமாக நடப்பதாக இஸ்ரோ விண்வெளி மைய இயக்குனர் மயில்சாமி
அண்ணாதுரை பேசினார்.
செங்குந்தர் பொதுநல அமைப்பு சார்பில், சங்க துவக்கவிழா நேற்று
கணபதி சி.எம்.திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், தென்னிந்திய செங்குந்த
மகாசன சங்க மாநிலத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
இஸ்ரோ விண்வெளி மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
விண்வெளித்துறையின் வளர்ச்சி விவசாயம், மீன்வளத்துறை, மழை
பொழிவு, உட்பட பல்வேறு துறைகளின் நிலைப்பாட்டை கணித்து வளர்ச்சிக்கான
செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
சந்திராயன், மங்கள்யான் மட்டுமல்லாது உலக நாடுகள் வியக்கும்
அளவிற்கு, இந்தியா மாதத்திற்கு ஓர் செயற்கைகோளை விண்ணில் செலுத்தி
வருகிறது.
சந்திரன், செவ்வாய் கிரகங்களை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய, சில மாதங்களில் ஆதித்யா செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
எதிர்கால குழந்தைகளுக்கு நல்ல சமூக பழக்கவழக்கங்களை கற்றுத்தர
வேண்டியது காலத்தின் அவசியம். பெற்றோர்கள், நம் மரபு, முன்னோர்களின்
வரலாறு குறித்து கட்டாயம் கற்பிக்க வேண்டும். பொதுநலம் என்பது அனைவரின்
எண்ணங்களிலும் விதைக்கப்படவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், செங்குந்தர் பொது நல அமைப்பு சுந்தரம்,
செயலாளர் ராமகிருட்டிணன், துணை செயலாளர் செல்லதுரை, எஸ்.இ.எஸ் மெட்ரிக்
பள்ளி தலைவர் திருவேங்கடசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Post a Comment