Title of the document

கடலுார், நாகையை மிரட்டிய, 'நடா' புயல், நேற்று வலுவிழந்தது. ஆனாலும், 'இன்றும், நாளையும், கடலோர மாவட்டங்களில், பரவ லாக மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

வங்கக் கடலின் தென் கிழக்கில் உருவான, 'நடா' புயல், பலத்த காற்றுடன், வேதாரண்யம் புதுச்சேரி இடையே, இன்று அதி காலைக்குள் கரையை கடக்கும் என, கணிக் கப்பட்டது. 

ஆனால், சென்னையிலிருந்து, தென் கிழக்கே, 290; புதுச்சேரியிலிருந்து, தென் கிழக்கே, 210; இலங்கை திரிகோணமலையிலி ருந்து, 220 கி.மீ., துாரத்தில், நேற்று பிற்பகலில் மையம் கொண்டுஇருந்த புயல், தீவிர காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

காற்றழுத்த தாழ்வு மண்டலம்,இன்று அதி காலை,வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை நெருங்கியபின், வலு குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டல மாக மாறும். அதனால், கடலோர மாவட்டங்களுக் கான புயல் ஆபத்து நீங்கியுள்ளது.இருப்பினும், கடலோர பகுதிகளில், இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும்.

கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்ப தால், மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண் டாம். ராமேஸ்வரம் முதல், சென்னை அருகேயுள்ள பழவேற்காடு வரை, 10 அடி உயரத்திற்கு, அலைகள் எழலாம். கடலோர பகுதிகளில், 65 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.

துாத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில்,ஒன்றாம் எண்; சென்னை, எண்ணுார், காட்டுப் பள்ளி, நாகை, கடலுார், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறை முகங்களில், மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப் பட்டுள்ளது. 

ஒன்றாம் எண் கூண்டானது, எச்சரிக்கையாக இருங் கள் என்றும், மூன்றாம் எண் கூண்டுக்கு, பலத்த காற்று டன் கூடிய, மோச மான வானிலை யால், துறைமுகத்திற்கும், கடலோர பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்றும் அர்த்தம்.

நேற்று காலை, 8.00 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், வேதாரண்யத்தில் அதிகபட்ச மாக, 5; நாகையில், 2 செ.மீ., மழை பதிவானது. புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார், புதுக்கோட்டை, செய்யூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில், நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post