2018ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயமாக்கப்படுவதாக சிபிஎஸ்இ நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2010ம் ஆண்டு வரை பொதுத் தேர்வு நடைபெற்று வந்தது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் பொதுத் தேர்வு நடைமுறை 2010ம் ஆண்டோடு கைவிடப்பட்டதால், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள், நேரடியாக 12ம் வகுப்பில் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக, கல்வியாளர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் 2018ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பரிந்துரையை சிபிஎஸ்இ நிர்வாகக் குழு ஏற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment