Title of the document
 https://tse3.mm.bing.net/th?id=OIP.M7dafa5614d7489e18687fba5ea47e7a1o0&pid=15.1&P=0&w=207&h=159
உண்மையை மறைத்து கட்டணச் சலுகையை கூடுதலாக பயன்படுத்தி தேர்வு கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குரூப்-1 பணிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 8-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கி மற்றும் அஞ்சலக செலான் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்த விரும்புவோர் டிசம்பர் 10-ம் தேதிக்குள் கட்ட வேண்டும். இதற்கான எழுத்துத்தேர்வு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக் கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப் பதில் தாமதமோ, தொழில்நுட்ப பிரச்சினைகளோ எழ வாய்ப்புள்ளது.
விவரங்களை மாற்ற முடியாது விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடு செய்யவும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப் பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதானா என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்றக்கோரி பெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வுக் கட்டணச்சலுகையை ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணச் சலுகையை பயன்படுத்தி, தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post