Title of the document

ஆம்பூர்: ஆம்பூரில் என்ரிச் சொசைட்டி சார்பில், விரைவில் தொடங்கப்பட உள்ள ஐஏஎஸ் தேர்வு எழுதுபவர்களுக்கான இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக என்ரிச் சொசைட்டியின் தலைவர் மதார் கலீலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆம்பூர் என்ரிச் சொசைட்டி சார்பில், ஆம்பூர் அருகே பாங்கி நகர் பகுதியில் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கான இலவசப் பயிற்சி விரைவில் தொடங்கப்பட்ட உள்ளது. 21 வயது முதல் 32 வயதுள்ள ஐஏஎஸ் தேர்வு எழுத விருப்பமுள்ள பட்டதாரிகள் தங்கள் சுய விவரக் குறிப்பை, கல்லூரிச் சான்றிதழ் நகல்களுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ என்ரிச் சொசைட்டி, எண்.
1, வெங்கடசமுத்திரம் சாலை, தேவலாபுரம் போஸ்ட், ஆம்பூர் - 635811 என்ற முகவரிக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post