அகில இந்திய அளவில் நடைபெறும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான
தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் நவ.,5ம் தேதி நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு
6,580 பள்ளிகளிலிருந்து சுமார் 1,55,657 மாணவ, மாணவியர்கள் 449 தேர்வு
மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு 01.11.2016
முதல் www.tngdc.gov.in என்ற இணையதளம் மூலம் பள்ளியின் தலைமையாசிரியர்
அல்லது முதல்வர் பதிவிறக்கம் செய்து தேர்விற்கு விண்ணப்பித்த மாணவ,
மாணவியர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தேர்வுக்கூட
நுழைவுச்சீட்டு பெறாத மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர்
அல்லது முதல்வரை உடன் அணுகி பெற்று கொள்ளலாம்.
இத்தேர்வு இரண்டு கட்டங்களில் நடைபெறம்:MAT (Paper I)
காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை Break காலை 11.00 மணி முதல் 11.30 மணி
வரை SAT (Paper II) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரைதேர்வர்கள்
தேர்வு ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே (காலை 8.30 மணி) தேர்வு
மையங்களை சென்றடைய வேண்டும். மேலும், சென்ற ஆண்டு (2015-2016) தேசிய
திறனாய்வுத் தேர்வுக்கு (NTSE) வழங்கப்பட்ட MAT / SAT வினாத்தாள்கள்
www.tngdc.gov.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில்
வெளியிடப்பட்டுள்ளது.