Title of the document

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படவுள்ளதாக, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அலுவலகத்திலும் வருகிற 5ம் தேதி (இன்று ) முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு இன சுழற்சி முறை பின்பற்றப்படும். விண்ணப்பதாரர்கள் குடியிருக்கும் இடத்திற்கும், காலியாக உள்ள சத்துணவு மையத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ.க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், இனம், விதவை/ கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளி சான்றுகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவராக இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்களுக்கு 20 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வருகிற 22ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
நேர்முக தேர்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையதள முகவரி www.krishnagiri.nic.in என்ற முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி / நகராட்சி அலுவலகத்திற்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post