Title of the document

சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவபட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னையில்  இன்று (5-ஆம்தேதி) தொடங்குகிறது.

இது தொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்டஅறிவிப்பில்
தெரிவித்திருப்பதாவது: இந்த கல்வியாண்டில் சித்தா, ஆயுர்வேதம்,யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, ஹோமியோபதி போன்றமருத்துவ பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வு நாளை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணாஅரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடக்கவிருக்கிறது. தகுதியானவிண்ணப்பதாரர்களுக்கு தரவரிசை எண் 2, 830 வரை, கட் ஆப் மதிப்பெண் 165.50வரை தனித்தனியாக கலந்தாய்வு குறித்து தகவல் குறுஞ்செய்தி, அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், ‘www.tnhealth.org’ என்ற இணைய தளத்தில் தங்கள்விண்ணப்பப்பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, தங்களுக்குரியதகவல், அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும்,விண்ணப்பதாரர்கள் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில், அவர்களுக்குரியகலந்தாய்வு நாளில், அனைத்து அசல் சான்றிதழ்கள் அல்லது தற்சமயம்படித்துவரும் கல்லூரியில் இருந்து பெற்ற ஆளறி சான்றிதழ்களுடன்,தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து நவம்பர் 1-ஆம் தேதிக்கு பின்னர்சென்னையில் மாற்றத்தக்க வகையில்,‘‘Director of Indian Medicine and Homoeopathy,Chennai-106’’ என்ற பெயரில், ரூ.5,000-க்கான கேட்புவரைவோலையுடன் பங்கேற்க வேண்டும்.

தரவரிசை விவரங்களுக்கு சுகாதாரத்துறை இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

கலந்தாய்வு 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. முதல்நாள் காலைகலந்தாய்வில் சிறப்பு பிரிவைச் சேர்ந்த 106 பேர் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் 199முதல் 193.25 வரையும், பிற்பகல் 2 மணிக்கு 193 முதல் 187.50 வரை,தரவரிசையில் 740 பேர் பங்கேற்கலாம்.

6 ஆம் தேதி, காலை கட்-ஆப் மதிப்பெண் 187.25 முதல் 183 வரை, பிற்பகல் 182.75முதல் 178 வரை என தரவரிசையில் 741முதல் ஆயிரத்து 756 வரை பங்கேற்கலாம். 7 ஆம் தேதி காலை, 177.75 முதல் 172 வரையும் , பிற்பகல் 171.75 முதல் 165.50வரை தரவரிசையில் ஆயிரத்து 757 முதல் 2 ஆயிரத்து 830 பேர் வரைபங்கேற்கலாம். கலந்தாய்வில் பங்கேற்க காலை 7 லிருந்து 8 மணிக்குள்ளும், பகல்12 மணி முதல் 1 மணிக்குள்ளும் வந்துவிட வேண்டும். கலந்தாய்வில் பங்கேற்றுகல்லூரியை தேர்வு செய்தவர்கள் 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில்சேர்ந்திருக்க வேண்டும்’ என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post