புதுதில்லி: அரசின் உத்தரவின் படி புதிய ரூபாய்
நோட்டுகளை பொது மக்களிடம் புழக்கத்திற்கு கொண்டு வரும் பொருட்டு, நாளை
முதல் பிற வங்கிகளின் ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி
செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், புதிய ரூபாய் நோட்டுக்களை பெறவும் வழி வகை செய்யும் வகையில் வங்கிகளின் ஏ.டி.எம்-கள் இரண்டுநாட்கள் செயல்படவில்லை.
இரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்த அனைத்து ஏடிஎம்-களும் நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன.
அந்த ஏடிஎம்-களில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை மக்கள் எடுத்துக் கொள்ள முடியும். எனவே நாளை முதல் சில தினங்களுக்கு ஏடிஎம்-களில் குவியும் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு பிற வங்கிகளின் ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக மற்ற வங்கி ஏடிஎம்-களை 5 முறை வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கு தனிகட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது