Title of the document


தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த, அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இதன்படி, கிராமப்புற மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வரும் வகையில், செயல்வழி கற்றல், விளையாட்டுடன் இணைத்து வகுப்புகளை நடத்துவது, ஆங்கில பயிற்சி போன்ற, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


நாமக்கல் மாவட்டம் மோகனுார் ஒன்றியத்தில் பரளி ஊராட்சி நடு நிலைப்பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஸ்மார்ட் வகுப்புக்கு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


இதுகுறித்து, தலைமையாசிரியை சாந்தி கூறுகையில்,'''ஸ்மார்ட் வகுப்பில், 'எல்.இ.டி.,' திரையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், தமிழ், ஆங்கில பாடங்களை, மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்கின்றனர். ஆன் - லைன் மூலம், இணையதள பாடங்களையும் மாணவர்களுக்கு திரையில் காட்டுகிறோம். இதற்கு பெற்றோரும் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்,'' என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post