மறு உத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவின் அடிப்படையில் மறு உத்தரவு வரும் வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காவிரி நீர் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை மீது வரும் 25ம் தேதிக்குள் இரு மாநிலங்கள் சார்பில் கருத்து தெரிவிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், நடுவர் மன்றத்தின் உத்தரவு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணையானது என்றும் தெரிவித்துள்ளது

إرسال تعليق