Title of the document

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பொதுமுறை மாலுமி பயிற்சி


தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனமான தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம் (Tamilnadu Maritime Academy) வழங்கும் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான பொதுமுறை மாலுமி பயிற்சிக்கு (Pre-Sea Course for General Purpose Rating) விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய அரசின் கப்பல் வணிகத்திற்கான பொது இயக்குநரகம் அங்கீகரித்துள்ள ஆறு மாத கால இருப்பிடப் பயிற்சி (Residential Course) இது. இதில் திருமணமாகாத ஆண்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

ஆங்கில வழியில் அளிக்கப்படும் இப்பயிற்சிக்குப் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை எடுத்துப் படித்திருப்பதுடன், மொத்தம் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். குறிப்பாக, ஆங்கிலப் பாடத்தில் 40%  மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 40% மதிப்பெண் பெறாத நிலையில், +2 அல்லது பட்டப் படிப்பில் ஆங்கிலப் பாடத்தில் 40% மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

பயிற்சியில் சேர்பவர்கள் 17½ வயதுக்குக் குறையாமலும், 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் வரை தளர்வு உண்டு. வயதினை உறுதிப்படுத்த பிறப்புச் சான்றிதழ் நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், பாஸ்போர்ட் பெற்றிருப்பதுடன் அதன் நகலும் இணைக்கப்பட வேண்டும்.

இப்பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் ‘வணிகக் கப்பல் சட்டம் - 2000’ குறிப்பிடும் கடல் பணியாளர்களுக்கான மருத்துவத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். கண்களில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கையின்போது பயிற்சிக் கட்டணமாக ரூ.1,50,000 ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.

இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/tnma எனும் இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750க்கு ‘Tamil Nadu Maritime Academy’ எனும் பெயரில் தூத்துக்குடியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. எடுத்து ‘Director, Tamil Nadu Maritime Academy, 333, South Beach Road, Thoothukudi-628001, Tamil Nadu’ எனும் முகவரிக்கு 28-10-2016ம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும். மேலும், கூடுதல் தகவல்களைப் பெற மேற்காணும் இணையதளத்தினைப் பார்க்கலாம்.

அல்லது ‘Director, Tamil Nadu Maritime Academy, 333, South Beach Road, Thoothukudi- 628001, Tamil Nadu’ எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தூத்துக்குடியிலுள்ள கடல் சார் பயிற்சி நிறுவன அலுவலகத்தின் 0461 - 2320075, 2320076, 2320078 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ பெறலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم