Title of the document


சமீபத்தில், 32 லட்சம் வங்கி ஏடிஎம் டெபிட் கார்டுகளில் தகவல் திருட்டு நடந்துள்ளதாக  வெளியான  சம்பவம், பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து, ஏடிஎம் கார்டு மோசடியை தடுக்க கைரேகை அல்லதுகருவிழி ஏடிஎம்களில் பணம் எடுப்பது உள்ளிட்ட கார்டு பரிவர்த்தனை வசதியை ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி  திட்டமிட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.அதாவது, ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனையை கொண்டுவர வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி வங்கிகள், பேமன்ட் வங்கிகள் என அனைத்தும், தங்களது ஏடிஎம்களில், ஆதாருடன் ஒருங்கிணைக்கப்பட்ட கார்டு பரிவர்த்தனைக்கு வகை செய்ய வேண்டும் என  ரிசர்வ்  வங்கி தெரிவித்துள்ளது.மேலும், மோசடிகளை  தடுக்கு பொருட்டு, புதிதாக வழங்க உள்ள  கார்டுகளில், சிப், பின் நம்பர் மற்றும் பயோமெட்ரிக் இணைந்த பரிவர்த்தனையை கொண்டு வர வேண்டும் என   ரிசர்வ்  வங்கி தெரிவித்துள்ளது.பயோமெட்ரிக் முறையில் ஒப்புதல் என்பது வாடிக்கையாளரின் கைரேகை அல்லது கண் கருவிழி படலம் ஸ்கேன் செய்த பின்னரே  நாம்பணத்தை  எடுக்க  முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த  முறை அமலுக்கு  வந்தால்,  கருப்பு  பண  பரிவர்த்தனையும்  குறையும், எந்த  மோசடியும்  நடக்காது  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post