Title of the document


தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம்ரூபாய் இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., பயன்பாடு இலவசம், என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும், 1.66 லட்சம் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. அவற்றில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு 45 ஆயிரம் மையங்கள் உள்ளன. அனைத்து ஏ.டி.எம்., மைய பணப் பரிவர்த்தனைகளில், 41 சதவீதம்
எஸ்.பி.ஐ., கார்டுதாரர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க, ஏ.டி.எம்., பயன்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து, ஒரு நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப்தாவது: எஸ்.பி.ஐ., வங்கிக் கிளைகளில் கணக்குவைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் மாதத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு கீழ்வைத்திருப்பவர்கள், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,களில், ஐந்து முறையும், பிறவங்கிகளின் ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்குமேல் ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டுமானால், ஒவ்வொரு முறைக்கும் ஐந்து முதல் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால், தங்கள் கணக்கில் குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு, மாதத்திற்கு 9 முறை ஏ.டி.எம்.,களிலும், நான்கு முறை வங்கியிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருந்தால், நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்.,களில்கட்டணமின்றி, எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை, நவ., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இவ்வாறு, அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم