Title of the document


தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக நடப்பாண்டில் 8.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட வேளாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ். 50 சதவீத மானியத்தில் திட்டம் செயல்படுத்தும் வகையில் 3.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 2500 எக்டரpல் செயல் விளக்கத் திடல்கள் அமைக்க 1.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திட்டத்தினை மேம்படுத்தும் வகையில் 1 கோடியே 53 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய எண்ணெய் வித்து மற்றும் எண்ணெய்ப் பனை இயக்கத்தின் கீழ்.
450 ஹெக்டர் பரப்பில் செயல்விளக்கத் திடல்கள் அமைக்க ₹41.185 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 40 ஹெக்டர் பரப்பில் எண்ணெய்ப்பனை செயல்விளக்கத் திடல் அமைக்க 3.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் சாகுபடி செய்யப்பட்ட எண்ணெய் பனை பயிர்களுக்கு பராமரிப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி மான்யம், கருவிகள் மற்றும் விவசாயிகள் பயிற்சி ஆகிய இனங்களை திட்டம் செயல்படுத்தும் வகையில் 8.71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ், பின்னேற்பு மான்யம் வழங்குதல் இனத்தில் 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மானாவாரி மேம்பாடு திட்டத்தின்கீழ் 200 ஹெக்டர் பரப்பில் ராகி மற்றும் கொள்ளு பயிர்களில் செயல்விளக்கத் திடல்கள் மற்றும் ஒரு கறவை மாடு வழங்கும் இனத்தில் 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக, நடப்பாண்டில் மொத்தம் 8.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post