Title of the document


தர்மசாலா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, தர்மசாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்துடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 43.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக லதாம் 79, டிம் சவுத்தி 55 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அபாரமாக பந்து வீசிய பாண்டியா, அமித் மிஸ்ரா தலா 3, உமேஷ் யாதவ், கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.5 ஒவர்களில் முடிவில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராத் கோஹ்லி 85 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 முன்னிலை வகிக்கிறது. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم