சென்னை: காவரி நீர் பிரச்னைக்காக தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு
போராட்டம் நடத்தப்படஉள்ளது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு
அமைப்புகள் போரட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில்
உள்ள பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும், திட்டமிட்ட படி காலாண்டு
தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என
காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னதாக தனியார் பள்ளிகள் சங்கத்தை
சேர்ந்தவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பள்ளிக்கு விடுமுறை
விடப்படுவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.போலீசார்
எச்சரிக்கை அறிவிப்பு:அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் என
காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகளுக்கு போலீஸ்
பாதுகாப்பு வழங்கப்படும். கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினாலும் நடவடிக்கை
எடுக்கப்படும். சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட உள்ளனர். ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாருடன் இணைந்து மாநகர
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் நாளை கல்லூரிகள் இயங்கும்:தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள் வழக்கம் போல் நாளை இயங்கும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லூரிகளுக்கு உரிய பாதுகாப்புவழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

Post a Comment