பொய் சொல்லும் குழந்தைகள் ‘அறிவாளிகள்’!

பொதுவாக, பொய் சொல்லும் குழந்தைகள், பின்நாளில் பெரும் பின்விளைவுகளையும், பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்குமே என்று பெற்றோரும், ஆசிரியர்களும் கவலைப்படுவர். ஆனால், சிறுவயதிலேயே பொய் சொல்லும் குழந்தைகள், அறிவாற்றல் மிகுந்து காணப்படுவார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது!
‘சிறுவயதில் பொய் சொல்வதற்கும், ஓரளவு வளர்ந்தபின் பொய் சொல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. சிறுவயதில் பொய் சொல்லும் குழந்தைகள் அறிவாற்றல் பெற்று விளங்குவர். அவர்களால், பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணவும், இலக்கை நோக்கி செயல்படவும் முடியும்’ என்று தெரிவித்துள்ள  இந்த ஆய்வை மேற்கொண்ட கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் காங் லீ, ‘ஆய்வு முடிவு இவ்வாறு வந்துள்ளது என்பதற்காக, காலங்காலமாக பின்பற்றப்பட்ட நடைமுறையை தூக்கி எறிந்துவிட்டு, குழந்தைகளுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுக்க இறங்கிவிட வேண்டாம்’ என்றும் எச்சரித்துள்ளார்.

Popular Posts

 

Most Reading

Follow by Email