Title of the document
மாணவியர் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்,' என, அறிவுறுத்தப்பட்டது.

பந்தலுார் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் இணைந்து, உணவு கண்காட்சி மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடத்தின. ஆசிரியர் மார்ட்டின் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் செலீன் தலைமை வகித்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பங்கேற்று பேசுகையில், ''மாணவ பருவம் என்பது வாழ்வில் முக்கியமான பருவமாகும். இந்த பருவத்தில் மாணவிகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் பல்வேறு நோய் மற்றும் பாதிப்புகள் ஏற்படும். எனவே, சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், முட்டை மற்றும் மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் அவசியம்,'' என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் சுகாதாரம் குறித்தும்; நகராட்சி துாய்மை திட்ட மேற்பார்வையாளர் பிரகாஷ் 'பிளாஸ்டிக்' அபாயம் குறித்து பேசினர்.

நிகழ்ச்சியில், மாணவியர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு கண்காட்சி அனைவரை

யும் கவர்ந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, சேவை மைய தலைவர் நவுசாத் முன்னிலை வகித்தனர். மாணவி விஷ்ணுபிரியா நன்றி கூறினார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post