நவ.4ல் தேசிய திறனாய்வு தேர்வுபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகையை பெற, மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 4ல் நடக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். இந்த தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in, என்ற இணையதளம் வழியாக, வரும், 23 முதல், செப்., 5 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம், 50 ரூபாய்.மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பின், அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Posts

 

Most Reading

Follow by Email