Title of the document


10 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கியது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி புதிய திட்டங்களை அறிவித்தார்.
நடப்பாண்டில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க ரூ.20.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தை நல ஒப்புயர்வு மையம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

காஞ்சி, நீலகிரி, நாகை மாவட்ட செவிலியர் பயிற்சி பள்ளிகளில் மாணவியர் விடுதி கட்டப்படும். 985 துணை சுகாதார மையங்கள் ஒருங்கிணைந்த சுகாதாரம், நலவாழ்வு மையமாக உயர்த்தப்படும். மேலும் மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.22 கோடியில் சி.டி.ஸ்டிமுலேட்டர் கருவிகள் வழங்கப்படும் என முதல்வர் பேரவையில் அறிவித்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.60 கோடி மதிப்பில் யோகா, இயற்கை மருத்துவ மையம் அமைக்கப்படும். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.42.84 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post