வங்கி கணக்குகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.15 பிடித்தம் செய்யப்படும் - SBI அறிவிப்பு - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Friday, 18 May 2018

வங்கி கணக்குகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.15 பிடித்தம் செய்யப்படும் - SBI அறிவிப்பு


பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின்கணக்கிலிருந்து 3 மாதத்துக்கு ஒருமுறை 15 ரூபாய் பிடித்தம் செய்யும் முறை தொடரும் என வங்கியின் தலைவர் ரஜனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ரஜனீஷ்குமார் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கி பரிவர்த்தனை குறித்த விவரங்களுக்காக 3 மாதங்களுக்கு ஒரு முறை 15 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது என்றும் அந்த முறையை திரும்பப் பெற இயலாது என்றும் கூறினார்.

வாடிக்கையாளர்களின் நலன் கருதியே அவர்களின் கணக்கிலிருந்து இந்தத் தொகை பிடித்தம் செய்யப்படுவதாகவும் ரஜனீஷ்குமார் தெரிவித்தார்.

Post Bottom Ad