Title of the document
Tamilnadu State Board 10th, 11th Result Date 2025 and Result Link

*📌10 வகுப்பு தேர்வு முடிவுகள் 16.5.2025 அன்று காலை 9.00 மணிக்கும்*

*📌11 வகுப்பு தேர்வு முடிவுகள் அன்றைய தினம் மதியம் 2.00 மணிக்கும் வெளியிடப்படும் !*


அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6.

பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (1) பொதுத் தேர்வுகள் மார்ச் / ஏப்ரல்-2025 தேர்வு முடிவுகள் வெளியிடுதல்..

மார்ச்/ஏப்ரல் -2025-இல் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (1) பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 16.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று அரசுத்தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதள முகவரி மற்றும் கால நேரம் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு (SSLC) : 

16.05.2025 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்கு


மேல்நிலை முதலாமாண்டு (+1) : 

16.05.2025 (வெள்ளிக்கிழமை) மதியம் 2.00 மணிக்கு

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post