"உதவியாசிரியர்" என்ற சொல்லை கல்வித்துறையிலிருந்து ஓட ஓட விரட்டிடுவோம்..
பொதுவாக மற்ற ஆசிரியர்களை குறிப்பிடுகையில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்று அழைக்கும் சக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இடைநிலை ஆசிரியர்களை மட்டும் உதவியாசிரியர்கள் என்று அழைக்கும் போக்கு உள்ளது...
இடைநிலை ஆசிரியர்கள் அசிஸ்டன்ட் எனில் அவர்கள் யாருக்கு உதவி?? பள்ளிக்கா? தலைமை ஆசிரியருக்கா? அல்லது மாணவனுக்கா?
"உதவி ஆசிரியர்கள்" என்ற சொல் கையாளப்படும் பொழுது, தலைமையாசிரியர் மட்டுமே மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரதான பணியிடம் என்பது போன்றும், இடைநிலை ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவி செய்வதற்கான ஆசிரியர்கள் மட்டுமே என்பது போன்றும் பொருளாகிறது ஆனால் இடைநிலை ஆசிரியர்களும் கற்பித்தல் பணி சார்ந்து நேரடியாக மாணவர்களுக்காகவே நியமிக்கப்படுகின்றனர். எனவே அவர்களை உதவியாசிரியர்கள் என்று அழைப்பது தவறானது..
மேலும் உதவி ஆசிரியர் என்ற பணிநிலையே கல்வித்துறையில் இல்லை.... இடைநிலை ஆசிரியர்கள் என்பதே பணிநிலையின் பெயராகும். எனவே பிறர் நம்மைக் குறிப்பிடும்பொழுது "இடைநிலை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பொறுப்பாசிரியர்" ஆகிய மூன்று பெயர்களை மட்டுமே பயன்படுத்திட நாம் அனுமதிக்க வேண்டும்..
மேலும் நமது அலுவலகம் சார்ந்த வாட்சப் குழுக்களில் தலைமையாசிரியர்கள் பதிவிடும் பொழுதும் அவ்வாறே பதிவிட அலுவலர்கள் அவர்களுக்கு அறிவுறுத்திட நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள் வேண்டும்...
காரணம் நாம் நம்மை எப்படி பார்க்கிறோமோ, நாம் நம்மை எப்படி நினைக்கிறோமோ அப்படித்தான் உலகமும் நம்மைப் பார்க்கும்...
♥ இடைநிலை ஆசிரியர் பா.அருண்குமார் பொள்ளாச்சி.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment