Title of the document

4 மாவட்டங்களில் - நாளை 08.03.2025 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிப்பு - CEO Proceedings

  1. தருமபுரி மாவட்டம் நாளை 08.03.2025 சனிக்கிழமை பள்ளி வேலை நாள்.
  2. நாகப்பட்டினம் மாவட்டம் நாளை 08.03.2025 சனிக்கிழமை
     பள்ளி வேலை நாள்.
  3. தஞ்சாவூர் மாவட்டம் நாளை 08.03.2025 சனிக்கிழமை
     பள்ளி வேலை நாள்.
  4. மயிலாடுதுறை மாவட்டம் நாளை 08.03.2025 சனிக்கிழமை
     பள்ளி வேலை நாள்.

1. தருமபுரி மாவட்டம் - 08.03.2025 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிப்பு :



பள்ளிக்கல்வி உள்ளூர் விடுமுறை - மழையின் காரணமாக பள்ளிகளுக்கு 06.02.2024 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுகட்ட 08.03.2025 சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவித்தல் தொடர்பாக.


தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக 16.10.2024 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அன்றைய நாளினை ஈடுகட்டும் வகையில் 08.03.2024 சனிக்கிழமை அன்று இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை/ உயர் மேல்நிலைப் பள்ளிகளும் வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுகிறது.

பார்வையில் காணும் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறை கடிதத்தில், 08.03.2025 அன்று உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அன்றைய தினம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் சென்னையில் இவ்விழா கொண்டாடப்படுவதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலையரங்கில் மகளிர் அலுவலர்களை ஒருங்கிணைத்து, அவ்வரங்கில் மாண்புமிகு தமிழக முதல்வரின் நிகழ்ச்சியினை நேரலை மூலம் ஒளிபரப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் சென்னையில் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் (15 மகளிர் மேல் நிலைப்பள்ளிகள், 5 மகளிர் உயர்நிலைப் பள்ளிகள்) பயிலும் மாணவிகளுக்கு பள்ளியின் Hi-Tech Lab இல் இருந்து கண்டுகளிக்க ஏற்பாடு செய்யுமாறும் அதன் அறிக்கையை இவ்வலுவலக அ6" பிரிவிற்கு அனுப்பிவைக்குமாறும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 

குறிப்பு : நேரலை நிகழ்ச்சிக்கான link பின்னர் தெரிவிக்கப்படும்.

2. நாகப்பட்டினம் மாவட்டம் - 08.03.2025 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிப்பு :




3. தஞ்சாவூர் மாவட்டம் - 08.03.2025  சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிப்பு :


கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் பொருட்டு நாளை (08.03.2025 சனி) வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4. மயிலாடுதுறை மாவட்டம் - 08.03.2025  சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிப்பு :





# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post