Local Holiday - வரும் திங்கட்கிழமை பிப்.10 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !!
![]() |
Local Holiday |
நாகை மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி 10ஆம் தேதி திங்கள் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாகை நீலாயதாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இது ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இதையொட்டி நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான அரசு செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும். இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

إرسال تعليق