Title of the document

ஆசிரியர் பணி - பெருமை, நிம்மதி இனி இருக்குமா? - ஆசிரியையின் வேதனை பதிவு

ஆசிரியராக முப்பத்தாறு ஆண்டுகள் கடந்து விட்டேன். இன்னும் சில ஆண்டுகள் பணியில் இருக்கும் நிலையில் எந்த ஆசிரியர் பணியைப் பெருமையாக எண்ணி இருந்தேனோ அந்த நிம்மதி இனி இருக்குமா? என்பது சந்தேகமாக இருக்கிறது 

ஏனெனில் கண் முன்னே சமூகம் மாணவர்களை சீர்கேடான வழியில் இழுத்துச் செல்லும் பொழுது அவர்களைக் காப்பாற்ற முடியாமல், அவர்களைக் கண்டிக்கவும் வழியில்லாமல்  அவர்கள் வாழ்க்கை வீணாவது பார்த்துக் கொண்டு ஆசிரியராக இருந்து என்ன பயன்? என்ற மனச்சோர்வு  உண்டாகிறது. 

மாணவர்கள் தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று அறிந்த பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே சீரழித்துக் கொள்கிறோம் என்று அறியாமல் நடந்து கொள்வதைக் காணும் போது மனம் பதறுகிறது.

 ஒரு பக்கம் பெற்றோர்கள் கவனிக்க முடியாத  மாணவர்கள் .ஆசிரியர்கள் அவர்களுக்காக எதை செய்த நினைத்தாலும் செயல்படுத்த முடியாத சூழலில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆசிரியராக நான் கவலை கொள்கிறேன். ஒரு பெற்றோராக மனம் பதறுகிறேன்.

 ஒரு சமூக அக்கறை உள்ளவளாக இந்த சமூகத்தின் மீது கோபம் கொள்கிறேன். மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யக்கூடாதா என்று துடிக்கிறது மனம்.

 ஆனால் கண்முன்னே கஞ்சா, கூலிஃப் மது இதனால் பாதிக்கப்பட்டு, அலைபேசியில் வயதுக்கு மீறிய காட்சிகளை கண்டு, அதுபோலவே நடக்க ஆசைப்பட்டு பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கேட்க முடியாமல் பதறி துடிக்கிறேன்.

 இந்த சமூகம் மாணவர்களை எங்கு அழைத்துச் செல்கிறது .ஆசிரியர்களை குற்றம் சொல்லி மாணவர்களை காப்பாற்றுவதாக என்னும் பெற்றோர்கள் அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறோம் என்று தெரியாமலேயே நடந்து கொள்கிறார்கள் .ஆசிரியர்கள் கண்டித்தால் ஆபத்து என்று எண்ணுவது எவ்வளவு ஒரு கேடான சமூகம் விளைய காரணமாக இருக்கும்.

 ஆசிரியர்கள் குறித்து வரும் செய்திகளை ஊடகங்கள் அதன் உண்மை தன்மையை அறியாமல் வெளியிடுவது எந்த அளவுக்கு அவர்களுக்கு மன சிக்கலை உண்டாக்கும் .அவர்கள் மீது குற்றம் சொல்லும் போது உடனடியாக செயல்படும் ஊடகம் அவர்கள் நிரபராதி எனும் போது அவர்கள் மீது குற்றம் சாட்டியவர்களுக்கு என்ன தண்டனை என  எப்போது கேட்கும் ?

 நான் மட்டும் தான் இப்படி கவலை கொள்கிறேனா? எனது கவலை தேவையில்லாத கவலையா? காலம் தோறும் மாணவர்களை குற்றம் சொல்லும் பெரியோர்கள் வரிசையில் நானும் ஒருத்தியா?

 ஒரு மாணவன் கையில் அரிவாளோடு திரியும் காட்சி இந்த சமூகத்திற்கு நன்மையை தருமா ? இதை பார்த்துக்கொண்டு இருக்கும் நானும் ஒரு குற்றவாளி தானே?

 எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குற்ற உணர்ச்சியை அதிகமாக்குகிறது. மாணவிகள் பள்ளி வயதிலேயே தாய்மார்களாக ஆவது சமூகத்திற்கு நல்லதா?

 மாணவிகள் தங்கள் பாதிப்பை கருதாமல் கண்டிக்கும் ஆசிரியரையும் பெற்றோரையும் எதிரியாக எண்ணி வாழ்க்கையை சீரழித்துக் கொள்வது எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்? ஒரு பக்கம் மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் , ஒரு பக்கம் கஞ்சா போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இது நல்லதா?

 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எது தேவை என்று கருதாமல் கேட்டதை எல்லாம் வாங்கித் தந்து பதின்ம வயதில் அவர்கள் பெற்றோர்களையே எல்லை மீறி போகும் பொழுது எதுவும் செய்யாத கண்ணீர் வடிக்கின்ற பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது இதற்கு தீர்வு தான் என்ன?

பெற்றோராக, ஆசிரியராக ஏதாவது செய்ய தோன்றுகிறது?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மு.கீதா

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

4 تعليقات

  1. இதே வேதனையோடு தான் நாங்களும் பயணிக்கிறோம்.

    ردحذف
  2. மாணவர்களை தண்டிக்க முடியாததற்கு ஒரே ஒரு காரணம் RTE act இந்த சட்டம் வந்த உடனேயே ஆசிரியர்களாலேயே ஆசிரியர்கள் தன் தலைமையில் மண்ணை வாரிசுவும் படி செய்தது. அதில் மாற்றங்கள் கொண்டு வந்தால் நிச்சயமாக வழி பிறக்கும்

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم