Title of the document

வகுப்பறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட ஆசிரியை - ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் !!

  நேற்றைய தஞ்சை சம்பவத்தை SSTA இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இன்று இயக்க ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பள்ளி செல்வார்கள். விரைவில் பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தல்.


இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்
SSTA அறிக்கை - வன்மையாக கண்டிக்கின்றோம் இன்று 20-11-2024 தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்த செல்வி ரமணி அவர்கள் மாணவர்கள் முன்னிலையில் சமூக விரோதியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர செயலை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) சார்பாக மிக வன்மையாக கண்டிக்கின்றோம். கோயிலை போன்று புனிதமான வகுப்பறையில் இத்தகைய கொடூர சம்பவம் நடந்தேறி இருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, பள்ளி வகுப்பறையில் புகுந்து கொலை செய்யும் அளவிற்கு துணிந்த இந்த துணிகர கொலையாளிக்கு தமிழக அரசு உச்சபட்ச தண்டனையை பெற்றுதா தர வேண்டும். பொதுமக்களுடன் அதிகளவிலான தொடர்பில் இருக்கும் கல்வி துறையும், மருத்துவத்துறையிலும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்தேறி வருவது ஏற்புடையதல்ல. இனிமேலும் இதுபோன்று தொடர் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை மிகக் கடுமையாக தண்டிக்க பணி பாதுகாப்புச் சட்டத்தினை உடனடியாக ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் நிறைவேற்றிக் கொடுக்க எங்களது இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம். மேலும் இத்தகைய கொடூர செயலுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக நாளை 21.11.2024 எங்களது SSTA இயக்கத்தை சார்ந்த அனைத்து ஆசிரியர்களும் கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு செல்வார்கள் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய கொடூரங்கள் தொடர்ந்தால் மிக தீவிரமான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட தயாராக உள்ளோம். இத்தகைய குற்றங்கள் இனியும் தொடராத வண்ணம் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக ஆசிரியர்களின் பல வருட கோரிக்கையான பணிப் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக வழங்கிடுமாறு வேண்டுகிறோம்..

-------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - அறிக்கை :
மாநில மையம் நாள்:20.11.2024 ******** கண்டன அறிக்கை ******** மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 08/2024 நாள்: 20.11.2024. ******** வகுப்பறைக்குள் ஆசிரியை குத்திக் கொலை! சகிக்க முடியாத கொடூரச் செயல்! உச்சபட்சத் தண்டனை வழங்க வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம்! ******* தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை வகுப்பறைக்குள்ளேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சகிக்க முடியாத கொடூரச் செயல். குற்றவாளிக்கு சட்டப்படி உச்சபட்சத் தண்டனை வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை. தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது மாணவர்கள் கண்முன்னே கொடூரக் குற்றவாளியால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால்; மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், மிகப்பெரிய அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக, அரசுப் பள்ளியில் வகுப்பறைக்குள் நடந்த இந்த கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணமாக இருந்தாலும் பள்ளிக்குள் சென்று ஒரு ஆசிரியரை எளிதாகக் கொலை செய்துவிட முடியும் என்ற எண்ணம் கொடூரக் குற்றவாளிக்குத் தோன்றியுள்ளது என்பதே பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்பதை வெளிப்படையாக உணர்த்துவதாக உள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே பள்ளிகளில் நடந்துள்ள சூழலில் ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலும் இதுவரை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை என்பது வேதனை தரும் நிகழ்வாகும். எனவே உடனடியாக ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தைக் தமிழக அரசு கொண்டுவர வேண்டும். மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி அவர்களுக்கு ஏற்பட்ட கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட கொடூரக் குற்றவாளிக்கு சட்டப்படி உச்சபட்சத் தண்டனை வழங்கிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. பணிபுரியும் இடங்களில் ஆசிரியர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. இனிமேலும் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் அதற்காக கடுமையான போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ******** இப்படிக்கு ச.மயில் பொதுச்செயலாளர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி



-------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிக்கை




# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post