Title of the document
😔😔 *தேவையா...  போலியான  ஆசிரியர் தின வாழ்த்துகள்..?*




*எனதருமை ஆசிரியப் பேரினமே*

*உனக்கு எதற்கு ஆசிரியர் தினம்???????*

*ஆசிரியர்களை கொண்டாட வேண்டிய அரசும் நம்மை கைவிட்டது.*

*சமுதாயமும் நம்மை கைவிட்டது*.


*உன் மனக்குமுறல்களை அரசும் சமுதாயமும் உணரும் வரை உனக்கு எதற்கு ஆசிரியர் தினம்???*

*இடைநிலை ஆசிரியர் ஊதியம் மீட்கப்பட்டதா???*

*பதவி உயர்வு பிரச்சனைக்கு விடை கிடைத்துவிட்டதா??*

*அரசாணை 243 நீக்கப்பட்டதா??*

*பழைய ஓய்வூதியத் திட்டம்* 
*
*நடைமுறைப்படுத்தப்பட்டதா???*

*EMIS பணியிலிருந்து விடுவிக்கப் பட்டாயா???*

*எண்ணும் எழுத்தும் திட்டம் கைவிடப்பட்டதா???*

*இலவசப் பொருட்கள் பெறுவதிலிருந்து விலக்களிக்கப் பட்டதா???*

*மருத்துவர்களைப் போல் உனக்கு பணிப்பாதுகாப்பு இருக்கிறதா???*

*காலை உணவுத் திட்டத்திலிருந்து விலக்களிக்கப் பட்டதா???*


*வருவோர் போவோர்க்கெல்லாம்  ஏவலாளியாக மாறிப்போன ஆசிரியப் பேரினமே*

*சென்ற மாதம் சுதந்திர தின பெருவிழா* 

*இந்த மாதம் கலைத்திருவிழா கொண்டாட்டங்கள்*.

*அடுத்த மாதம் ஆண்டு விழா கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்றாலும்*
*அதற்கும் தயாராவாய்.*


*ஒருமுறை SMC   கூட்டம்*
 *நடத்தி முடிப்பதற்குள்* *தலைமை* *ஆசிரியரின் இரத்த அழுத்தத்தை* Bp* *பரிசோதனை செய்தால் எந்திரம் பழுதாகும் அளவுக்கு அழுத்தத்தைக் காண்பிக்கும்.*
இதை மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்.

*காகிதப் பயன்பாட்டைக் குறைக்கிறோம் என்கிறார்கள்.*
*ஆன்லைனில்* 
*ஏற்றியதை* *படிவத்தில் எழுத* *வேண்டும்.*
*படிவத்தில் எழுதியதை ஆன்லைனில் ஏற்ற வேண்டும்* (பருத்தி மூட்டை காமெடி மாதிரி)
*படிவங்களை பூர்த்தி செய்தே பாதி வேலை நேரம் முடிகிறது*.


*உரிமைகளை இழந்தோம்*
*உடைமைகளை இழந்தோம்*

*இதே மன அழுத்தத்தில் பணிபுரிந்தால் நாளை நமது* 
______
 *இழப்போம்.*

*இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும்*
*தினம் தினம் தன்  மாணவர்களுக்கு* *புதிதாக ஒன்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என ஆவலோடு பள்ளிக்கு* *செல்லும் ஆசிரியப் பேரினமே உனது எண்ணம் நிறைவேறுகிறதா???*

*என்பதை உன் மனசாட்சியே அறியும்.*
 *கோரிக்கைகள் வென்றெடுக்கப்படாது*.

இன்று நீ ஓய்வு பெற்றால் நாளையே நீ நடுரோட்டில் நிற்க வேண்டும்.. பிச்சை எடுக்க வேண்டும்...  ஏனென்றால் ஓய்வூதியம் கிடையாது.. ❌⚠️

இன்றைய ஆட்சியாளர்கள்  விதவிதமான பொய்களை சொல்லி தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள்...

அவர்களுக்கு இவர்கள் பரவாயில்லை..
இவர்களுக்கு அவர்கள் பரவாயில்லை.. என்ற விதத்தில் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள்... மன உளைச்சலை அதிகமாக்குகிறார்கள்...

*நமது கோரிக்கைகள் நிறைவேறாத வரை* 

*நமக்கு எதற்கு ஆசிரியர் தினம்???*.

ஆசிரியர்கள் போராடும்போது கழிவறை கூட இல்லாத மண்டபங்களில் அடைத்து வைத்ததையும் போராட கிளம்பும்போது அங்கங்கே தீவிரவாதியை போல் கைது செய்ததும் மறக்க முடியுமா..?

அரசியல்வாதிகளை போல் நமக்கு எந்தவித சூடு சொரணமே சொரணையும் இல்லையா..?

*ஆசிரியர் தின வாழ்த்துக்களை உள்ளத்தில் வைத்து* 

*உரிமைகளை* *எண்ணத்தில் வைத்து*
*ஆசிரியர் தினத்தை* *புறக்கணிப்போம்*

ஆசிரியர்களை மதிக்காத எந்த அரசாங்கமும் உறுப்பட்டதாக சரித்திரம் இல்லை.. ❌ இனியும் இருக்க முடியாது.. ❌⚠️

எப்படியும் ஆட்சியாளர்கள் வாயிலிருந்து  போலியான ஆசிரியர் தின வாழ்த்துக்கள் என்று வடை சுடுவார்கள்...


எனவே ஆசிரியர் குழுக்களில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பதிவிட வேண்டாம்.. ❌⚠️

............... வருத்தத்துடன் உங்களில் ஒருவன்  😔😔😔😔
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post