Title of the document

SBI வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்! 


எஸ்பிஐ வங்கியில் நாடு முழுவதும் காலியான உள்ள 8,283 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notification - Download here

தகுதி; இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது இரண்டு பட்டப்படிப்புகள் சேர்த்து படித்த டிகிரி தேவை. இரண்டு பட்டப்படிப்புகள் சேர்த்த டிகிரி கொண்டவர்கள் 2023 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்களுக்கு டிகிரியை பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணியிடங்களுக்கு முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு நடத்தப்படும். முதல் நிலை தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, முதன்மை தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய நாட்கள்;

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் : நவம்பர் 17, 2023

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : டிசம்பர் 7, 2023

முதல் நிலை தேர்வு : ஜனவரி 2024

முதன்மை தேர்வு : பிப்ரவரி 2024

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டணம் :

இப்பணியிடங்களுக்கு https://sbi.co.in/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். General/ OBC/ EWS பிரிவினர்களுக்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ ST/ PwBD/ ESM/DESM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post